×

ஆதிவாசிகளின் நிலங்களைப் பறிக்கும் மோடி அரசு: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சூரத்: ஆதிவாசிகளின் நிலங்களைப் பறித்து அவற்றைத் தொழிலதிபர்களுக்கு பாஜக வழங்கியுள்ளது என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம், ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஆகிய கட்சிகளுக்கு இடையே தீவிரமடைந்துள்ளது. அந்த வகையில் குஜராத் மாநிலம் சூரத்த்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி; அதில் பணவீக்கம், ஊழல் மற்றும் பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளில் இருந்து குஜராத் மக்களை விடுவிக்க நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். ஆதிவாசிகள்தான் இந்த நாட்டின் முதல் உரிமையாளர்கள்.

அவர்களின் அடையாளங்களை மறைத்து, பாஜக வனவாசிகள் என அவர்களைக் கூறுகிறது. ஆதிவாசிகளின் நிலங்களைப் பறித்து அவற்றைத் தொழிலதிபர்களுக்கு பாஜக வழங்கியுள்ளது. ஆதிவாசிகள் நகரத்தில் வாழ்வதையோ, கல்வி, சுகாதாரம், வளர்ச்சி பெறுவைதையோ அவர்கள் விரும்பவில்லை. பழங்குடியினர் நலனுக்காக, காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியிலிருந்த போது கொண்டு வந்த பல சட்டங்கள் பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வருகிறபோது, இந்த சட்டங்களையெல்லாம் பலப்படுத்துவோம். உங்கள் நலனுக்காக புதிய சட்டங்களை இயற்றுவோம் எனவும் கூறினார்.


Tags : Modi Govt ,Adivasis ,Congress ,Rahul Gandhi , Modi Govt taking away lands of Adivasis: Congress MP Rahul Gandhi allegation
× RELATED நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை:...